பிரதமர் அன்வார் – சவுதி இளவரசர் சந்திப்பு

ரியாத்:

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இருவரும் நேற்று சனிக்கிழமை அல்-யமாமா அரண்மனையில் சந்தித்துக்கொண்டனர் .

சவூதி அரேபியா முதல் ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) உச்சி மாநாட்டை வெள்ளிக்கிழமை தலைநகரில் நடத்திய பின்னர், அன்வாருக்கு பட்டத்து இளவரசரின் தனிப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அக்டோபர் 7 ஆம் தேதி மீண்டும் வெடித்த பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் குறித்து பட்டத்து இளவரசர் முகமது மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இருவரும் களத்துரையாடினர்.

உச்சிமாநாட்டில், முடிக்குரிய இளவரசர் மற்றும் அன்வர் இருவரும் காசாவில் பாலஸ் தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் கொடுமை மற்றும் அடக்குமுறை பற்றி தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய சந்திப்பின் போது, இரு நாடுகளின் வளர்ச்சி வாய்ப்புகள் உட்பட பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ஆசியான்-ஜிசிசி உச்சிமாநாட்டில் கலந்துகொள்வது தவிர, அன்வார் தனது இரண்டு நாள் பயணத்தின் போது மலேசியா மற்றும் சவுதி அரேபியா இடையே இருதரப்பு மற் றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தார்.

அக்டோபர் 5 ஆம் தேதி, மலேசிய பிரதமருக்கு பட்டத்து இளவரசர் முகமது தொலை பேசி மூலம் அவரை சவுதி அரேபியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here