ரஷ்யாவை மிரள வைக்கும் கோவிட் -19 உயிரிழப்பு ; ஒரே நாளில் 1,252 பேர் பலி !

ரஷ்யாவில், கடந்த சில நாட்களாக கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், கோவிட் -19 வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 36,970 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,331,158 ஆக அதிகரித்து உள்ளது. கோவிட் -19 தொற்றுக்கு ஒரே நாளில் மேலும் 1,252 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 26,495 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் தினசரி கோவிட் -19 பாதிப்பு, நேற்றைய பாதிப்பை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here