சிலாங்கூர் ம.இ.கா. நிர்வாகப் பொறுப்புக்கு எண்.3இல் சுங்கை பூலோ மு.ரவி போட்டி

சிலாங்கூர் மாநில ம.இ.கா. நிர்வாகப் பொறுப்புக்கான தேர்தலில் போட்டியிடுவதால் கட்சி பொறுப்பாளர்கள் தம்மை தேர்வு செய்வார்கள் என்று பெக்கான் பண்டார் பாரு சுங்கை பூலோ ம.இ.கா. கிளைத் தலைவர் மு.ரவி நம்பிக்கை தெரிவித்தார். ம.இ.கா.தான் என் மூச்சு என்று இன்றுவரை கடமையாற்றி வருகின்றேன். கட்சித் தலைமைத்துவம் இடுகின்ற உத்தரவுகளை ஏற்று அதன்படி கடமைகளை ஆற்றி வருகின்றேன் என்றார்.

சாதாரண உறுப்பினராக இணைந்து 37 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றேன். முன்னாள் தேசியத் தலைவர் துன் டாக்டர் ச.சாமிவேலு தலைமைத்துவத்தின் போது, ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்திற்கு 77 ஆயிரம் ரிங்கிட் என் கிளை சார்பில் நன்கொடை வழங்கியுள்ளேன். அதுமட்டுமல்லாது டேப் கல்லூரி, வெண்டோ கல்லூரி, கோப் டிடேக் உள்ளிட்டவைகளுக்கு நன்கொடைகளையும் வழங்கி இருக்கின்றேன்.

மேலும் என்னால் முடிந்த சமூக உதவிகளை நான் செய்து வருகிறேன். அந்த வகையில் இயலாதவர்களுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கியிருக்கிறேன். மேலும் இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற (குறிப்பாக கால்பந்து)  பல விளையாட்டு உபகரணங்களை வழங்கி இருக்கிறேன். அதே போல் ஆலயங்களுக்கும் நிதியுதவி வழங்கி இருக்கிறேன்.

ஜாலான் சுபாங், கம்போங் ஸ்ரீ முஹிபாவில் உள்ள 43 குடியிருப்பாளர்களுக்கு என் தலைமைத்துவத்தில் நிலப்பட்டா வழங்கி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி ளற்படுத்திய வாய்ப்பு கிடைத்தது. முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ கிர் தோயோ நேரடியாக வந்து இந்த நிலப்பட்டாவை வழங்கினார். இது ம.இ.கா.வுக்கு கிடைத்த வெற்றியாகும். இன்று அந்த நிலத்தின் மதிப்பு பல லட்சம் ரிங்கிட் மதிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மருத்துவமனையில் பணியாற்றுகின்ற காரணத்தால் கட்சியினருக்கும் மக்களுக்கும் மருத்துவ ரீதியிலான உதவிகளை செய்ய என்னால் முடிகிறது. இப்போதும் அந்தப் பணி் தொடர்கிறது என்று மு. ரவி கூறினார். எனவே, சிலாங்கூர் மாநில நிர்வாகப் பொறுப்பிற்கு களம் இறங்குகின்றேன். 3ஆம் எண் வாக்கு என்னுடையது என்பதால் கிளைப் பொறுப்பாளர்கள் தமக்கு வாக்களிக்குமாறு மு. ரவி கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here