கொழும்பு, நவம்பர் 23 :
கிழக்கு இலங்கையில், இன்று காலை தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப்படகு கவிழ்ந்ததில் 6 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை, கிண்ணியாவில் படகு கவிழ்ந்த போது அதில் 20 பாடசாலை மாணவர்கள் இருந்ததாகவும், கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கை போலீசார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடியிருப்பதாகவும், காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு சில உள்ளூர் தன்னார்வலர்களும் கடற்படையினருக்கு உதவிவருகின்றனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும்பணி தொடர்கிறது.
அதிக பாரம் ஏற்றியதால் படகு கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.