“மலேசியக் குடும்பம் 100 நாள் அபிலாஷைகள்” நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பாகவே MITIஇன் மகத்தான சாதனை

மலேசியக் குடும்பம் 100 நாள் அபிலாஷைகள் திட்டமானது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சரவை உறுப்பினர்களின் 100 நாட்கள் வெற்றிகளையும் அடைவு நிலைகளையும் பதிவு செய்வதற்காகப் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒரு நிகழ்வாகும்.

இந்நிகழ்வானது 2021, டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (கேஎல்சிசி) நடைபெறவுள்ளது.

இந்த நான்கு நாள் நிகழ்வில் அனைத்து 31 அமைச்சுக்களும் பல்வகையான திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடுசெய்துள்ளன.

கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவலின் தாக்கத்தைக் கவனத்தில்கொண்டு உடல்நலம், சுகாதாரம், கூடல் இடைவெளி போன்றவற்றில் அதீத அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 4,000 பேர் மட்டுமே நேரில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 100,000 பேர் மெய்நிகர் (இயங்கலை) வழி காண்பதற்குரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சும் (MITI – மிட்டி) இந்நிகழ்வில் பங்கேற்கிறது. அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்து ஏஜென்சிகளும் பங்குபெறுகின்றன.

3 முக்கிய அபிலாஷைகள்

மலேசியக் குடும்பம் அபிலாஷைகள் கோட்பாட்டின் கீழ் ஆறு பிரதான கட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் MITI 1ஆவது கட்டத்தில் உள்ளது. அமைச்சின் தலையாயக் கடமை நாட்டின் பொருளாதார மீட்சியை மறுகட்டமைப்பு செய்வது ஆகும்.

பல அபிலாஷைகள் வகுக்கப்பட்டு அவற்றை 100 நாட்களில் அமல்படுத்தும் பொறுப்பு ஒவ்வோர் அமைச்சுக்கும் வழங்கப்பட்டது.

இதில் MITI மூன்று (3) முக்கிய அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு பொறுப்பு ஏற்றது.

1). தயாரிப்புத் துறைகளில் ஏற்றுமதியை அதிகரிப்பது;
– பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் முதலீட்டுத் திட்டங்களை அமல்படுத்தி முதலீட்டாளர்களை முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் அதிமுக்கிய வியூகமாகும்.

2). ஏற்றுமதி சந்தையை அதிகரித்து விரிவுபடுத்துவது;
– நாட்டின் ஏற்றுமதி மதிப்பை அதிகரிப்பதற்கு ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டங்களை அமல்படுத்தியது.

3). தயாரிப்புத் தொடர்பான அனைத்து தயாரிப்பு மேலும் சேவைத் துறைகளும் மீண்டும் முழுமையான அளவில் பாதுகாப்புடன் செயல்படுவதை உறுதிச்செய்தல்.

– இந்நோக்கத்திற்காக அரசு – தனியார் துறைகளின் ஒத்துழைப்புடன் தேசிய கோவிட்-19 தொழில்துறை தடுப்பூசித் திட்டத்தை (PIKAS) அமல்படுத்தியது.

இதில் 10 லட்சம் தொழிலாளர்கள் முழு அளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்த இலக்கில் MITI முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் வழிகாட்டிகளைப் பின்பற்றி இம்மூன்று அபிலாஷைகளையும் அடைவதில் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சு வெற்றிபெற்றிருக்கிறது.

தனது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட அனைத்து 3 அபிலாஷைகளிலும் அடைவுநிலையை உறுதிசெய்திடுவதற்கு MITI பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தது.

விளம்பர நடவடிக்கை முயற்சிகளைப் பல மடங்காக அதிகரித்ததும் அதில் அடங்கும். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புக்கும் முயற்சிகளுக்கும் முழு அளவில் ஊக்கம் தரப்பட்டது.

ஒவ்வொரு முன்னெடுப்பும் முயற்சியும் இந்த அனைத்து அபிலாஷைகளையும் நன்கு திட்டமிட்டு இலக்கை முழுமையாக அடைவதை உறுதிச்செய்யப்பட்டது.

இந்த ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் எதிர்பார்த்த வெற்றி இலக்கை அடைவதற்கு உதவியாக இருந்தன. சரியான புரிதல்களும் சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளின் உத்வேக சிந்தனைகளும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இலக்கை அடைவதில் துணை புரிந்தன.

இலக்கில் அளப்பரிய வெற்றி

MITI அமல்படுத்தியிருக்கும் இந்த அனைத்து 3 அபிலாஷைகளின் வழி நாட்டு மக்கள் பலன் பெற வேண்டும் என்ற இலக்கு எட்டப்பட்டிருக்கிறது.

– பல்வேறு துறைகளில் மக்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றனர். இதனால் சமூகப் பொருளாதார அந்தஸ்து உயர்வு கண்டது.

– அதேசமயத்தில் மக்களின் திறன்களும் மேம்பாடு கண்டன.
பல்வேறு பயிற்சிகளின் வழி அவர்களின் திறன்களை அதிகரிக்கும் வாய்ப்புகளைப் பெற்றனர். தயாரிப்புத் தொழில் துறைகளில் இப்புதிய திறன்கள் பெரும் அளவில் கைகொடுத்தன.
மக்களின் வேலை வாய்ப்பு எல்லைகளும் விரிந்தன.

– கொள்முதல் செய்வோர், குத்தகையாளர்கள், உள்நாட்டுத் தொழில்முனைவர்கள் ஆகியோருக்கான வர்த்தக வாய்ப்புகளும் சந்தைகளும் பெரிய அளவில் விரிவாக்கம் கண்டன.

– மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறைகளையும் தொழில்முனைவர்களையும் அதிக எண்ணிக்கையில் உருவாக்கி, உலகளாவிய சந்தைகளில் ஊடுருவுவதற்கும் இந்த 100 நாள் திட்டம் பெரும் பங்காற்றி இருக்கிறது.

– உள்நாட்டு தொழில் முனைவர்களுக்கும் மைக்ரோ, சிறு, நடுத்தரத் தொழில் துறைகளுக்கும் அதிகமான அளவில் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தும் இலக்கிலும் MITI வெற்றி பெற்றிருக்கிறது.

– அதேசமயத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாதுகாப்பான பணியிடச் சூழலை உருவாக்கும் இலக்கு எட்டப்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் அந்தப் பாதுகாப்பை முழுமையாக உணரத் தொடங்கியிருக்கின்றனர். இது தயாரிப்பு, சேவைத் துறைகள் எழுச்சி பெறுவதற்கு உதவிபுரிகிறது.

– தொழிற்சாலைகள் சார்ந்த சேவை மேலும் தயாரிப்புத் துறைகள் மீண்டும் முழுமையான அளவில் திறக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வேலையின்மை விகிதாச்சாரம் பெரிய அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. வேலை இழந்தோர் புதிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இது அவர்களின் வாழ்வாதாரத்திற்குக் கைகொடுத்திருக்கிறது.

– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அமலில் இருந்தபோது பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வருமானத்தை இழந்தனர். ஆனால், தற்போது அனைத்து தொழில்துறைகளும் முழுமையாகத் திறக்கப்பட்டிருப்பதில் தொழிலாளர் வருமானம் உறுதிச்செய்யப்பட்டு, பொருளாதார மீட்சிக்கு வித்திட்டுள்ளது.

அமைச்சர்களின் செயல்பாட்டு அளவீடு

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒவ்வோர் அமைச்சரின் செயல்பாடுகளும் 3 அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன.

1. நிர்ணயிக்கப்பட்ட 3 அபிலாஷைகளின் அடைவுநிலையை அடிப்படையாகக் கொண்டு அமைச்சின் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது.

2. அமைச்சரின் செயல்பாடு பிரதமர் அவர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது.

3. அமைச்சர் மேலும் அமைச்சின் மீதான பொதுமக்களின் மனவோட்டம், இந்த 100 நாள் இலக்கில் ஓர் அமைச்சு மட்டும் அன்றி அதன் கீழ் செயல்படும் அனைத்து ஏஜென்சிகளின் அடைவு நிலைகளும் வெற்றிகளும் மதிப்பீடு செய்யப்படும்.

MITI கீழ் செயல்படும் ஏஜென்சிகளின் செயல்பாடுகளும் அடைவுநிலைகளும் அளப்பரியது. 100 நாட்களுக்கும் குறைவான காலகட்டத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி அளவை அதிகரிப்பதில் இலக்கு எட்டப்பட்டிருப்பது ஒரு சாதனையாகப் பதிவாகி இருக்கிறது. அதேவேளையில் வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடுகளும் அவற்றின் இலக்கை எட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 100 நாட்களுக்கும் குறைவான காலகட்டத்தில் இச்சாதனை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here