மச்சாங், நவம்பர் 25 :
நேற்று, இங்குள்ள ஜாலான் மச்சாங் – தானா மேரா, கிலோமீட்டர் 3.3 இல், நான்கு பேர் கொண்ட குடும்பம் ஓட்டிச் சென்ற, ஒரு வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், தளபாடப் பொருட்கள் (furniture maker) செய்பவரான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நேற்றுக் காலை 9.20 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட முஹமட் ஃபக்ருல் ரட்ஸி யஹானி, 24, உடலின் பல பாகங்களில் பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை கண்காணிப்பாளர் காந்தி ஜிம்மி கூறுகையில், பாதிக்கப்பட்டவர் மச்சாங்கில் இருந்து தனா மேராவுக்கு சுசுக்கி வகை மோட்டார் சைக்கிளில் சென்றார் என்று ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
“பாதிக்கப்பட்டவர் மச்சாங்கை நோக்கிச் செல்லும் பெட்ரோல் நிலையத்தின் சந்திப்பில் இருந்து, வெளியே வந்து 26 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற டொயோட்டா வெல்ஃபயர் MPV மீது மோதியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.