தாமான் புக்கிட் பந்தாயில் நிலச்சரிவு

கோலாலம்பூர்:

தாமான் புக்கிட் பந்தாயில் உள்ள ஒரு மூன்று மாடி வீட்டுப் பிரிவின் மேல் தளத்திலிருந்த நீச்சல் குளத்தில் இருந்த வடிகாலில் கசிவு ஏற்பட்டதால் அதன் பின்புறத்தில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக யாரும் சிக்கவில்லை என்று பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் மூத்த நடவடிக்கை தளபதி முஸ்தபா கமால் முகமட் அரிஹ் தெரிவித்தார்.

“மண் ஈரமாகி, மண் நகர்வு அல்லது அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க, தீயணைப்புப் படை அங்கிருந்த நீச்சல் குளத்தின் நீரை முழுமையாக வெளியேற்றியுள்ளது என்று இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த விஷயம் தொடர்பில் DBKL , காவல்துறை மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு ஆகியோர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here