ஜோகூர் பாரு:
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மக்களை குழப்புவதை குறிப்பாக 3R (இனம், மதம் மற்றும் ஆட்சியார்கள் ) பிரச்சினைகளில் சர்ச்சையைஏற்படுத்தி, பொதுமக்களை குழப்புவதையோ நிறுத்துமாறு முற்போக்கு ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சராகவும் இருக்கும் தியோங் கூறுகையில், முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவியை ஏனைய தலைவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.
“துன் அப்துல்லா அஹமட் படாவியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுமாறு டாக்டர் மகாதீரிடம் நான் கேட்க விரும்புகிறேன், ஏனெனில் அவர் பதவி விலகிய பிறகு அமைதியாக இருக்கத் தேர்ந்தெடுத்துள்ளார். இன்று வரை எதற்காகவும் சர்ச்சையான அல்லது குழப்பமான கருத்துக்களை தெரிவித்ததில்லை”.
அதற்கு பதிலாக, அவர் நம் நாட்டின் நன்மைக்காக பிரார்த்தனை செய்கிறார். டாக்டர் மகாதீர் ஏன் அமைதியாக இருக்க முடியாது? என்று நேற்றிரவு இங்குள்ள தாமான் புக்கிட் இண்டாவில் நடந்த சீன சமூகத்தினருடனான ஒரு நிகழ்வில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.








