சரவாக்கில் கோவிட்-19 புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவது உண்மையே; மாநில துணை முதல்வர் உறுதி

பாராம் , நவம்பர் 27 :

சரவாக்கில் கோவிட்-19 புதிய தொற்றுக்களின் கீழ்நோக்கிய போக்கு, சில தரப்பினரால் கூறப்படுவது போல் தேர்தலுக்கான யுக்தியாக கையாளப்படவில்லை என்று மாநில துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ் கூறினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 12வது சரவாக் மாநிலத் தேர்தலைத் தொடரும் நடவடிக்கையை நிரூபிக்கும் வகையில், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேர்தலை நியாயப்படுத்த, மாநில அரசு கோவிட் -19 தொற்று எண்களைக் கையாளுவதாக குற்றம் சாட்டிய, சில நெட்டிசன்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அவர் இதனை தெரிவித்தார்.

“இந்த புள்ளிவிவரங்கள் சுகாதார அமைச்சகத்தால் (MOH) தினமும் தெரிவிக்கப்படுகின்றன. இதில் மாநில அரசின் தலையீடு எதுவுமில்லை. 12வது மாநிலத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான தனது முடிவை நியாயப்படுத்துவதில் இதனை அரசாங்கம் கையாள்வதாக சில நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

இன்று இங்கு பாராமின் லாங் பெமாங்கில் உள்ள கம்போங் லாங் பெமாங் சமூகக் கூடத்தில் வேளாண் சமூகப் பரப்புத் திட்டத்தின் (AgriCOP) தொடக்க விழாவில் உக்கா இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் பாராம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அன்யி நகாவ் மற்றும் தெலாங் உசான் தொகுதிக்கான GPS பதவியில் உள்ள டென்னிஸ் நகாவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

“மாநில அரசு இப்போது (மாநில) தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது சரிதான். அடுத்த ஆண்டு வரை காத்திருந்தால், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை எதிர்பார்க்கப்படும் மாநிலத்தில் பருவமழை தவிர எதிர்காலத்தில் புதிய மாறுபாடுகள் தோன்றக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம், ”என்று அவர் கூறினார்.

சரவாக்கில் செவ்வாய்கிழமை- 192 ,புதன்கிழமை- 171, வியாழன்- 144 மற்றும் வெள்ளிக்கிழமை-137 புதிய கோவிட் -19 தொற்றுக்களை பதிவாகியுள்ளன. மேலும் இத்தொற்றுக்களின் கீழ்நோக்கிய போக்குக்கு முக்கிய காரணம் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதேயாகும்.

சரவாக்கில் 90.5 விழுக்காடு பெரியவர்கள் தடுப்பூசியின் இரு அளவையும் செலுத்திக் கொண்டுள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 75.5 விழுக்காடாகும். மேலும், இன்றுவரை 634,684 பேர் பூஸ்டர் டோஸ்களைப் பெற்றுள்ளனர் என்றார்.

இருந்தபோதிலும், சரவாக்கில் உள்ள அனைவரும் மாநிலத்தில் கோவிட்-19 பரவுவதைத் தடுக்க, குறிப்பாக, மாநிலத் தேர்தலின் போது நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (SOPs) தொடர்ந்து இணங்க வேண்டும் என்று உக்கா கூறினார்.

“எங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் அனைத்து சரவாக்கியர்களையும் பாதுகாக்க நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

சரவாக்கின் 12வது மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு டிசம்பர் 6ஆம் தேதியை தேர்தல் ஆணையம் (EC) நிர்ணயித்துள்ளது, முன்கூட்டிய வாக்குப்பதிவு டிசம்பர் 14ஆம் தேதியும், வாக்குப்பதிவு டிசம்பர் 18ஆம் தேதியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here