கேமரன் மலை சாலையின் நிலசரிவில் சிக்கிய லோரி முழுவதும் சேதமான நிலையில் கண்டெடுப்பு

சிம்பாங் பூலாய் -கேமரன் மலை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஒரு லோரி இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து கிடந்தது. மாலை 5.30 மணியளவில் மீட்பு குழுவினர் வாகனத்தை கண்டுபிடித்தனர்.

எனினும், வாகனங்களில் எத்தனை பேர் உள்ளனர் என்பது இதுவரை தெரியவில்லை. பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியிட்ட புகைப்படத்தில், லோரி நிலசரிவின்  தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட தரைமட்டமானது.

KM27 Jalan Simpang Pulai-Cameron Highlands என்ற இடத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் இடிபாடுகளுக்கு அடியில் இரண்டு வாகனங்களில் மக்கள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர், வாகனங்களுக்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை என்றும், வியாழன் (டிசம்பர் 2) மதியம் 1.44 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here