திறமையான, அணுகக்கூடிய, வசதியான அரசு சேவை அமைப்பை உறுதி செய்வதில் டிஜிட்டல் அமைச்சு உறுதியாக உள்ளது

 இன்று காலை warga Kementerian Digital எனப்படும் முதல் மாதாந்திர பேரவையில் டிஜிட்டல் அமைச்சின் அனைத்து பணியாளர்களும் உற்சாகமாக ஒன்று கூடினர். டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையில் துணை அமைச்சர், அமைச்சின் தலைமைச் செயலாளர் உட்பட அமைச்சின் ஏஜென்சி அதிகாரரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

ஒரு புதிய அமைச்சாக டிஜிட்டல் அமைச்சு, டிஜிட்டல் அரசாங்கம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் சொசைட்டி ஆகிய மூன்று முக்கிய மையங்களின் அடிப்படையில் ஏழு மூலோபாய மையங்களின் மூலம் நகரும். டிஜிட்டல் மாற்றம், பொருளாதார போட்டித்திறன் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றில் அமைச்சின் ஏஜென்சிகளும் தீவிரமாக பங்கு கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.

பொதுத்துறை நவீனமயமாக்கல், எளிதில் அணுகக்கூடிய அரசு சேவைகள் மற்றும் திறமையான அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து GovTech Malaysiaக்கான மாற்றம் செயல்படுத்தப்பட வேண்டும். தற்போதுள்ள தடைகளை குறைத்து, அனைவருக்கும் திறமையான, அணுகக்கூடிய மற்றும் வசதியான அரசு சேவை அமைப்பை உறுதி செய்வதில் அமைச்சகம் உறுதியாக உள்ளது என்றார்.

பொதுத்துறையும் தனியார் துறையும் ஒன்றுக்கொன்று இடையே உள்ள தொழில்நுட்ப இடைவெளியைக் குறைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மக்கள் அனுபவிக்கும் டிஜிட்டல் பிளவுகளை உடனடியாகக் கண்டறிந்து சமாளிக்குமாறு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

பிரதமரின் மடானி அபிலாஷைகளுக்கு ஏற்ப, நாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் டிஜிட்டல் மாற்றத்தை டிஜிட்டல் அமைச்சு கொண்டு வர எண்ணுகிறது என்று அவர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here