மலேசிய கோப்பை வெற்றி – நாளை கூட்டாச்சி மாநிலங்களுக்கு பொது விடுமுறை

இரு தினங்களுக்கு மலேசியக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜோகூர் தாருல் தாசிம் (JDT) குழுவை வீழ்த்தி கோலாலம்பூர் சிட்டி எஃப்சி (கேஎல் சிட்டி) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அரசாங்கம் நாளை வெள்ளிக்கிழமை (3.12.21) கூட்டரசு மாநிலங்களுக்கு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய இடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது விடுமுறைச் சட்டம் 1951இன் படி கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஷாஹிதான் காசிம் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மலேசியா கோப்பையை வெல்ல 32 வருடங்கள் காத்திருந்த பிறகு கேஎல் சிட்டியின் நேற்றிரவு வெற்றி மிகப்பெரிய சாதனை என்று அவர் ஒரு சிறிய அறிக்கையில் கூறினார்.

புக்கிட் ஜலீலில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் மலேசிய கோப்பையை வெல்ல KL சிட்டி சூப்பர் லீக் சாம்பியன்கள் அபார ஆட்டம் JDTயை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இரண்டாவது பாதியில் ஜாஃப்ரி யாஹ்யா மற்றும் பாலோ ஜோசுவின் கோல்கள் ஜோகூர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவியது. கடைசியாக 1989 இல் இந்த கிளப் மதிப்புமிக்க கோப்பையை வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here