போதைபொருள் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய 6 பேரை போலீஸ் தேடுகிறது

பாப்பார், டிசம்பர் 6 :

இங்குள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்று பாப்பார் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணைக் கண்காணிப்பாளர் பாத்தலோமிவ் அக் உம்பிட் தெரிவித்தார்.

தப்பியோடியவர்கள் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள் என்றும் கடந்த மாதமே போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை காலை 6 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்த போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் தப்பிக்கும் திட்டத்தில் 11 பேர் ஈடுபட்டதாகவும் ஆனால் ஆறு பேர் மட்டுமே சுவரில் ஏறி தப்பிச் செல்ல முடிந்தது என்றும் அவர் கூறினார்.

“அவர்கள் மையத்தின் வளாகத்தை விட்டு வெளியே வரும் வரை, அவர்கள் ஒருவருக்கொருவர் உடலில் ஏறி சுவரினைத் தாண்டியதாக நம்பப்படுகிறது.

“இருப்பினும், அவர்களில் ஐந்து பேர் வேலி மிக உயரமாக இருந்ததால், வேலியைத் தாண்ட முடியவில்லை” என்று அவர் கூறினார், மேலும் தப்பித்தவர்கள் அனைவரும் சாதாரண ஆடைகளை அணிந்துள்ளனர் என்றும் அவர்கள் இன்னும் மாவட்டத்தின்னுள்ளேயே இருப்பதாக நம்பப்படுகிறது.

பாப்பார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தடுப்புக் காவலில் இருந்து தப்பிச் செல்வதற்காகவும், சட்டப்பூர்வ கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்காகவும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 223/224 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார்.

இந்த கைதிகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், பாப்பார் போலீஸ் நடவடிக்கை அறையை 088-916064 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அல்லது “010-2611012 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி முஹமட் அலிஃப் முஹமட் ரசாலியைத் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here