கோவிட்-19 காரணமாக சிலாங்கூரிலுள்ள 55 மாணவர்கள் அநாதரவாகியுள்ளனர்- சித்தி மரியா

ஷா ஆலம், டிசம்பர் 7 :

ஜனவரி 2020 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை கோவிட்-19 காரணமாக சிலாங்கூரில் உள்ள 55 மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்து அனாதைகளாகிவிட்டனர் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

மாநில பொது சுகாதாரம், ஒற்றுமை மற்றும் பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறுகையில், சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மாநிலத்தில் மொத்தம் 1,648 மாணவர்கள் இதே காலகட்டத்தில் தொற்றுநோயால் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையாவது இழந்துள்ளனர் என்றார்.

உலு லங்காட், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் பெர்டானா ஆகிய மூன்று மாவட்டங்களில் அனாதைகள் அதிகம் இருப்பதாக அவர் கூறினார்.

ஜனவரி 2020 முதல் செப்டம்பர் 2021 வரை கொரோனா வைரஸ் காரணமாக சிலாங்கூரில் உள்ள அனாதைகளின் எண்ணிக்கையை அறிய விரும்பிய லிம் யீ வெய் (PH-Kampung Tunku) என்பவரின் கேள்விக்கு சித்தி மரியா இவ்வாறு கூறினார்.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here