300,000 வெள்ளி மதிப்புள்ள கடத்தப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல்; இருவர் கைது

கோலாலம்பூர், டிசம்பர் 8 :

ஓப் கோன்ட்ராபன் (Op Kontraban) நடவடிக்கை மூலம் 300,000 வெள்ளி மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இரண்டு உள்ளூர் ஆடவர்களை கைது செய்தனர்.

செராஸ் மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் முஹமட் இட்ஸாம் ஜாஃபர் கூறுகையில், சுங்கைபீசி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட காவல்துறையினரின் குழு இங்குள்ள டேசா துன் ரசாக்கில் உள்ள ஒரு வளாகத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் சோதனை நடத்தியது.

இச்சோதனையில், சிகரெட் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 38 மற்றும் 58 வயதுடைய இருவரை போலீஸார் கைது செய்ததுடன் சிகரெட்டுகள் அடங்கிய 2,993 அட்டைப்பெட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

“அதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில், பெட்டாலிங் ஜெயாவின் ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள ஒரு வளாகத்தில் போலீசார் சோதனை நடத்தியத்தில் மேலும் சிகரெட்டுகள் அடங்கிய 807 அட்டைப்பெட்டிகளையும் போலீசார் கைப்பற்றினர் என்றார்.

“சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 (1) (d) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவும் வகையில் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று முஹமட் இட்ஸாம் கூறினார்.

“சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு தகவலையும் தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது என்றும் “சட்டத்தை மீறும் எந்தவொரு நபர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையும் தயங்காது ,” என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here