கோலாலம்பூர், டிசம்பர் 8 :
நேற்று இரவு 11.59 மணி நிலவரப்படி, நாட்டில் உள்ள 12 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினரில் மொத்தம் 2,726,684 நபர்கள் அல்லது 86.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் இரு அளவையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் COVIDNOW போர்ட்டலின் அடிப்படையில், 2,833,870 நபர்கள் அல்லது 90.0 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
பெரியவர்களை பொறுத்தவரை, 22,734,488 பேர் அல்லது 97.1 விழுக்காட்டினர் தடுப்பூசியின் இரு அளவையும் செலுத்திக்கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 23,058,008 பேர் அல்லது 98.5 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
நேற்று விநியோகிக்கப்பட்ட 124,499 தடுப்பூசிகளில் 4,538 தடுப்பூசிகள் முதல் டோஸாகவும், 6,538 தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாகவும் மற்றும் 113,423 தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்தப்பட்டது. இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையை 54,326,199 ஆகக் கொண்டு வந்ததுள்ளது.





















