கோலாலம்பூர், டிசம்பர் 9 :
தடுப்பூசி போடாத அல்லது பகுதியளவு (ஒரு) தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர், கோவிட்-19 நோயால் இறப்பதற்கு 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுவதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தடுப்பூசி போடாத மற்றும் பகுதியளவு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் இறப்புகள் 1 மில்லியன் மக்கள்தொகைக்கு 3,200 பேராகும்.
“முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் இறப்புகள் 1 மில்லியன் மக்கள்தொகைக்கு 160 பேரும் பூஸ்டர் டோஸ் பெற்றவர்களைப் பொறுத்தவரை, 1 மில்லியன் மக்கள்தொகைக்கு சராசரியாக 4 இறப்புகள் மட்டுமே உள்ளன,” என்று அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்தார்.
மேலும் மக்கள் தங்கள் முகக்கவசங்களை சரியாக அணியுமாறும், அவர்களின் பூஸ்டர் டோஸ் சந்திப்புகளுக்கு வந்து தங்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறும் நினைவூட்டினார்.
புதிய ஓமிக்ரான் மாறுபாடு உட்பட, கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு இவை இரண்டு மிகவும் பயனுள்ளவை என்று அவர் கூறினார்.





















