சரவாக் தேர்தல் தொடர்பாக இதுவரை 53 போலீஸ் புகார்கள் பதிவு

கூச்சிங், டிசம்பர் 11 :

12வது சரவாக் தேர்தல் தொடர்பாக, கடந்த டிசம்பர் 6ஆம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 53 போலீஸ் புகார்களை போலீஸ் பெற்றுள்ளதாக சரவாக் காவல்துறை ஆணையர் டத்தோ எய்டி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற புகார்களில் 27க்கு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அதே காலக்கட்டத்தில் காவல்துறை நான்கு அபராதங்களையும் வெளியிட்டுள்ளது.

“திறக்கப்பட்ட 27 விசாரணை ஆவணங்களில், ஆறு வழக்குகள் அவதூறு, சேதம் (13), கட்சிக் கொடிகள் சம்பந்தப்பட்ட திருட்டு (1), அலட்சியமான செயல் (1), சமூக ஊடகங்களில் இடுகையிடுதல் (2) மற்றும் நான்கு போலீஸ் விசாரணை அறிக்கைகளாகும்.

“மேலும், அதே காலகட்டத்தில் மொத்தம் 1,040 மேடைப்பேச்சு மற்றும் பேச்சுகளுக்கான அனுமதிகள் காவல்துறையினரால் வழங்கப்பட்டன,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here