பட்டர்வொர்த்தில் 7 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தால் கடுமையான நெரிசல்

பட்டர்வொர்த்: ஏழு வாகனங்கள் உள்ளிட்ட விபத்தில் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் திங்கள்கிழமை (டிச. 13) மாலை  பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விரைவுப் பேருந்து, இரண்டு 4×4 வாகனங்கள், ஒரு வேன், பல்நோக்கு வாகனம் மற்றும் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இருப்பினும், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, செபராங் ஜெயாவிலிருந்து ஜூருவுக்குச் செல்லும் விரைவுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, அதன் முன்னால் இருந்த MPV மற்றும் பிற வாகனங்களில் மோதியதைக் காட்டுகிறது. இந்த செய்தி எழுதும் நேரத்தில் உயிர் சேதம் குறித்த தகவல் கிடைக்கவில்லை.

மாநில போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுத் துறைத் தலைவர்  ஜாஃப்ரி சுப்ஃகிப்ளியை தொடர்பு கொண்டபோது, ​​இந்தச் சம்பவத்தை உறுதி செய்து, இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here