ஈரானில் நீரூற்றுகளில் சிவப்பு நிறத்தைக் கலந்து நூதன முறையில் போராட்டம்

ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி அவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.

போலீஸ் தாக்கியதில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினி, கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவிய நிலையில் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு முயற்சித்து வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இருப்பினும் தொடர்ச்சியாக அங்குள்ள மக்கள் பல்வேறு நூதன முறைகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஈரான் நாட்டில் உள்ள பொது நீரூற்றுகளில் சிவப்பு நிறத்தைக் கலந்து அந்நாட்டு மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here