பகாங் வெள்ளத்தில் மூழ்கி பலியான தோட்டத் தொழிலாளியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

பெக்கான், டிசம்பர் 23 :

இங்கு அருகிலுள்ள ஃபெல்டா சினி 2 இல் வெள்ளம் சூழ்ந்த சாலையின் வழியாக செல்ல முயன்ற தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டது, இதனைத்தொடர்ந்து பகாங்கில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

36 வயதான சே ருஸ்தம் சே சூ, என்பவர் கடைசியாக தனது மோட்டார் சைக்கிளில் அதிகாலை 3.40 மணியளவில் சென்றதைக் கண்டதாகக் கூறப்பட்டது. இறுதியாக அவரை கண்ட இடத்திலிருந்து சிறிது தொலைவில் அவரது சடலம் இன்று மீட்புப் பணியாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் செம்பனம்பழங்களை சேகரிப்பதற்காக ஒரு தோட்டத்தை நோக்கி பயணித்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் முகமட் ஜைதி மட் சின் தெரிவித்தார்.

“அவர்கள் காலை 9 மணியளவில் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் தங்கள் வீட்டை விட்டு கிளம்பி, சினி 2 இல் உள்ள தோட்டத்திற்குச் சென்றனர். தோட்டத்தை அடைந்ததும், தொடர்ச்சியான கனமழையால் சாலையின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

“பாதிக்கப்பட்டவர் தனது மோட்டார் சைக்கிளை வெள்ளத்தில் ஓட்ட முயன்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் விழுந்தார். 20 மீட்டர் அகலமும் 5 மீட்டர் ஆழமுமான தண்ணீர் பாய்ந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு நீரின் ஆழம் தெரியவில்லை,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காலை 10.50 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். சே ருஸ்டமின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பெக்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஜைடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here