சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,510 கோவிட்-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று பதிவான 3,519 வழக்குகளில் இருந்து குறைந்துள்ளது.ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,731,713 தொற்றுகளாக உள்ளது என்றார். 4,998 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,652,585 ஆக உள்ளது.
இதற்கிடையில், 329 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர். அவர்களில் 255 பேர் கோவிட்-19 தொற்று எனவும் மற்றும் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். 179 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 121 நோயாளிகள் கோவிட்-19 தொற்று எனவும் மற்றும் மீதமுள்ள 58 பேர் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இன்று 3,415 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 3,255 மலேசியர்கள் மற்றும் 160 வெளிநாட்டினர் மற்றும் 95 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் 80 மலேசியர்கள் மற்றும் 15 வெளிநாட்டவர்கள் உள்ளனர்.
இதில், நோயறிதலின் போது 1.7% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர். இன்று ஆறு புதிய கொத்துகள் பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.




















