அயோப் கான் மீண்டும் புக்கிட் அமானுக்கு திரும்புகிறார்

அயோப் கான் மைடின் பிட்சை, போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநராக புக்கிட் அமானுக்குத் திரும்புகிறார். தற்போது ஜோகூர் காவல்துறைத் தலைவராக இருக்கும் அயோப் கான், இதற்கு முன்பு சிறப்புப் பிரிவு பயங்கரவாத எதிர்ப்பு முதன்மை உதவி இயக்குநராக இருந்தார்.

காவல்படைத் தலைவர்  அக்ரில் சானி அப்துல்லா சானி, அயோப் கான் உட்பட நான்கு மூத்த போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக துறை இயக்குநர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அறிவித்தார்.

அயோப் கானுக்குப் பதிலாக கெடா காவல்துறைத் தலைவர் கமருல் ஜமான் மாமத் நியமிக்கப்பட்டுள்ளார். புக்கிட் அமான் ஒருமைப்பாடு மற்றும் தரநிலைகள் இணக்கத் துறையின் துணை இயக்குநர் வான் ஹசன் வான் அகமது கெடா காவல்துறையின் புதிய தலைவராக வருவார்.

புக்கிட் அமான் போதைப்பொருள் சிஐடியின் இயக்குநர் ரஸாருதீன் ஹுசைன் டிச.26 முதல் காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்படுவதாகவும் அந்தக் கடிதம் அறிவித்தது. நான்கு அதிகாரிகளும் ஜனவரி 25 க்கு முன் பணிக்கு வருவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here