கோவிட் தொற்றின் இறப்பு எண்ணிக்கை 31,290 – நேற்றைய இறப்புகள் 25

பெட்டாலிங் ஜெயா; சுகாதார அமைச்சகம் அதன் GitHub தரவுத்தளத்தின்படி, நேற்று 25 கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதில் ஐந்து பேர்  சேர்க்கப்பட்டபவர்கள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை இப்போது 31,290 ஆக உள்ளது.

சமீபத்திய இறப்பு பட்டியலில்  ஜோகூரில் 6 பேரும் தெரெங்கானு (5), பேராக் (4), சிலாங்கூர் (3), கிளந்தான் (2) மற்றும் கெடா (2), பகாங் (1), கோலாலம்பூர் (1) மற்றும் சபா (1) மற்றும் சபா ( 1)

பினாங்கு, நெகிரி செம்பிலான், சரவாக், மலாக்கா, பெர்லிஸ், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் எந்த மரணத்தையும் பதிவு செய்யவில்லை.

நள்ளிரவு நிலவரப்படி, தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) 339 உட்பட 46,877 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. அவர்களில் 180 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

மேலும் 4,489 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,735,241 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here