வெள்ளத்தை குறைக்க வடிகால் குறித்து சோதனை செய்யுங்கள் – மாமன்னர் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, நகர்ப்புறங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, நாட்டில் உள்ள வடிகால் அமைப்பில்  சோதனை நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்ற அவர், “நகர்ப்புறங்களில் அல்லது நகரங்களில் உள்ள வடிகால் குறித்து மறு ஆய்வு நடத்த பரிந்துரைக்கிறேன்.

தாமான் ஸ்ரீ மூடாவில் வசிப்பவர்களையும் சந்தித்து அவர்களுக்கு உதவிகளை வழங்கிய மாமன்னர், நிலைமையை எதிர்கொள்வதில் அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டதற்குப் பாராட்டு தெரிவித்தார்.

நான் வீடு வீடாகச் சென்றேன். அவர்களின் வாழ்க்கை மீண்டும் வழக்க நிலைக்க திரும்ப வேண்டும். உதவி செய்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றி. கிளந்தான் மற்றும் பகாங்கைச் சேர்ந்த நண்பர்களும் உதவிக்கு வந்தனர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இது தேவைப்படுபவர்களுக்கு உதவ அவர்களின் ஆர்வத்தை காட்டுகிறது.

அவருடன் சிலாங்கூர் தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி, நிதியமைச்சர் டெங்கு ஜஃப்ருல் அஜீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைவர் அஃபெண்டி புவாங் ஆகியோரும் உடன் சென்றனர்.

முன்னதாக, இங்குள்ள பிரிவு 19 இல் உள்ள பயிற்றுனர் மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சி மையத்தில் (CIAST) உள்ள நிவாரண மையத்தில் (PPS) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மன்னர் பார்வையிட்டு பேசினார்.

அரசர் நிவாரண மையத்தில் தானே  நான்கு சக்கர வாகனத்தை தானே ஓட்டினார். கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமட் பைசல் அப்துல் ராஜி அவர்களால் கிள்ளான் வெள்ள நிலைமை, குறிப்பாக தாமான் ஶ்ரீ மூடாவின் நிலைமை குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 39 குடும்பங்களைச் சேர்ந்த 149 பேரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பண உதவிகளை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here