தாசேக் கெலுகோரில் பூட்டிய SUVயில் நபர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுப்பு

தாசேக் கெலுகோர்,

பினாங்கு தாசேக் கெலுகோர் பகுதியில் உள்ள தாமான் ஆரா முத்தியாரா வணிக வளாகத்தின் பின்புறம் நிறுத்தப்பட்ட Mazda CX-5 மாடல் SUV வாகனத்தில் ஒருவர் இறந்த நிலையில் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டார்.

34 வயதுடைய ஆண் ஒருவர் வாகனத்தின் டிரைவர் இருக்கையில் மயக்க நிலையில் இருந்தார். வாகனத்தின் என்ஜின் இயங்கி கொண்டிருந்தபோதும், கதவுகள் பூட்டப்பட்டிருந்தன என பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி கதவை திறந்தனர். ஆனால், மருத்துவக் குழு அவர் வாகனத்துக்குள்ளேயே உயிரிழந்துள்ளதாக உறுதி செய்தது என்றார் அவர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மீட்பு நடவடிக்கை இரவு 9.35 மணிக்கு முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here