பறந்துக் கொண்டிருந்த விமானம் மீது ஐஸ்கட்டி மோதியது !

சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்த போயிங் 777 விமானத்தின் மேல் ஐஸ் கட்டி மோதியதில் விபத்து ஏற்பட்டது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம் கடந்த 25ஆம் தேதியன்று, கோஸ்டாரிகாவில் உள்ள லண்டன் கேட்விக்கில் இருந்து சான் ஜோஸ்க்கு செல்லும் பயணத்தின் போது, திடீரென ஆகாயத்தில் இருந்து ஒரு ஐஸ்கட்டி விழுந்ததால் விமானத்தின் முன்புற கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், அதற்கு மேல் விமானத்தை இயக்க முடியாததால் அருகில் உள்ள விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியது. இந்நிலையில், இந்த போயிங் விமானத்திற்கு மேல் பறந்துக் கொண்டிருந்த மற்றோரு விமானத்திலிருந்து இந்த ஐஸ் கட்டி விழுந்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கும், அவர்களது முழுப் பணத்தையும் திருப்பித் தருவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விபத்திலிருந்து உயிர் பிழைத்ததே மிக அதிர்ஷ்டவசமான விஷயம் என விமானத் துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here