சிலாங்கூரில் வெள்ளத்திற்குப் பிந்தைய கழிவு மேலாண்மைக்காக RM6 மில்லியன் செலவு – மந்திரி பெசார் தகவல்

ஷா ஆலம், டிசம்பர் 31 :

மாநிலத்தில் வெள்ளத்திற்குப் பிந்தைய கழிவுகளை நிர்வகிக்க சிலாங்கூர் அரசாங்கம் RM10 மில்லியனின் ஆரம்ப ஒதுக்கீட்டில் இருந்து மொத்தம் RM6 மில்லியனை இதுவரை செலவிட்டுள்ளது என்றுமந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

துப்புரவுப் பணி மற்றும் வெள்ளக் கழிவுகளைச் சேகரிப்பதற்கு RM10 மில்லியன் வெள்ளி முதல் RM20 மில்லியன் வரை ஒதுக்கீடு தேவை என்றார்.

“உலு லங்காட்டில், குறிப்பாக தாமான் ஸ்ரீ நந்திங் பகுதியில் பெரிய அளவிலான தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 70 விழுக்காடு பணி நிறைவடைந்துள்ளது.

“தாமான் ஸ்ரீ மூடா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், மற்றும் சுத்தப்படுத்தும் முன்னேற்றம் மந்தமாக உள்ள பகுதிகளிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இப்பணியை துரிதப்படுத்த இன்னும் 200 லோரிகளையும் இணைத்து ஒரு வாரத்திற்குள் துப்புரவு பணியை முடிக்க முயலுகின்றோம்,” என்றார்.

தாபுங் இக்தியார் சிலாங்கூர் பாங்கிட் (Tabung Ikhtiar Selangor Bangkit) திட்டத்தின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகையை இன்று வழங்கிய பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

இதுவரை, 20,000 டன்களுக்கும் அதிகமான வெள்ளத்திற்குப் பிந்தைய கழிவுகள் மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டுள்ளன, மேலும் அதன் துணை நிறுவனமான KDEB கழிவு மேலாண்மை மூலம் சேகரிக்கப்பட்ட 7,000 டன் வீட்டுக் கழிவுகளையும் நிர்வகித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here