வெள்ளம் காரணமாக செகாமாட்டில் இரண்டு சாலைகள் மூடப்பட்டன

ஜோகூர் பாரு, ஜனவரி 1 :

நேற்று முதல் தொடர் மழை பெய்து வருவதால், ஜோகூரின் செகாமாட் மாவட்டத்தில் உள்ள இரண்டு சாலைகள் அனைத்து வகையான வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, ஜோகூர் பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு குழு தலைவர் முகமட் சோலிஹான் பத்ரி தெரிவித்தார்.

கம்போங் புக்கிட் தெம்புரோங்கில் உள்ள ஜாலான் ஜபி சாலைகள் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு மூடப்பட்டதாகவும், கம்போங் சிம்பாங் லோய்க்கு அருகிலுள்ள ஜாலான் பங்காஸ் சாலை 100 மீட்டர் நீளத்திற்கு மூடப்பட்டதாக அவர் கூறினார்.

“இரண்டு சாலைகளும் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளன. ஜாலான் ஜபிக்கு மாற்று வழி இல்லை, ஜாலான் பங்காஸுக்கு, வாகன ஓட்டிகள் ஜாலான் குவாலா பாயா, பலாய் பாடாங்கைப் பயன்படுத்தலாம்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாவட்ட பொதுப்பணித்துறையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

இன்று நண்பகல் நிலவரப்படி, செகாமாட்டில் 192 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 658 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்பது தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here