ஆப்கானிஸ்தான் பெண்கள் ஆன் லைனில் ஏலம்; புல்லிபாய் செயலி முடக்கம்

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றிய தலீபான் பயங்கரவாதிகள் ஒட்டுமொத்த நாடும் தங்கள் வசமானதாக அறிவித்தனர். தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டதில் இருந்து, அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.உணவு பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பெண்கள் சுதந்திரமாக செயல்படாத நிலை உள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதி, போர் மற்றும் பஞ்சத்தால் கடுமையான பதிப்புக்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள ஒரு நபர் தனது 10 வயது பெண் குழந்தையை விற்று அதில் இருந்து கிடைத்த பணத்தில் தனது 5 குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும், இவரை போன்ற பலர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு போரால் அங்கு பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது.அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்க முடியாத சூழலில் நாடு சிக்கி தவிக்கிறது.

நாட்டில் பாதிக்கு பாதி மக்கள் போதிய உணவு கிடைக்காமல் பசி பட்டினியுடன் வாடி வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களை ஏலம் விடுவதாக   அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செயலியை இந்தியாவில் முடக்கப்பட்டுவிட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

‘புல்லிபாய்’ என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது, அவைகள் ஏல விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சோந்த ‘கிட்ஹப்’ என்ற நிறுவனம், அந்தச் செயலிக்கு சேவை வழங்கி வந்தது. இந்நிலையில், ‘புல்லிபாய்’ செயலி குறித்து டெல்லியிலும் உத்தர பிரதேசத்திலும் காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கின.

இதில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று மும்பை காவல் துறைக்கும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கும் சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுவேதி டுவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, அந்தச் செயலியை கிட்ஹப் நிறுவனம் முடக்கி அமைச் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளாா். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘புல்லிபாய் செயலியை முடக்கியதை கிட்ஹப் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இணையவழி குற்றங்களைக் கண்காணிக்கும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கைக் குழுவும், காவல் துறையும் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன’ என்றனர்.

கடந்த ஆண்டு ஜுலையில் ‘சல்லிபாய்’ என்ற செயலியில் முஸ்லிம் பெண்களை ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியானது. இதுதொடாபாகப் புகாா்கள் எழுந்ததும் அந்த செயலையும், வலைதளப்பக்கத்தையும் கிட்ஹப் நிறுவனம் முடக்கியது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here