பினாங்கு விமான நிலையக் கழிப்பறையில் குப்பைத் தொட்டியில் குழந்தை கண்டெடுப்பு: இருவர் கைது

ஜார்ஜ் டவுன்: இன்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் கழிப்பறையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, மலேசியப் பெண் ஒருவரையும் மியான்மர் ஆடவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. குழந்தை அழுவதைக் கேட்ட துப்புரவுப் பணியாளர் ஒருவர், சுகாதாரக் குப்பைத் தொட்டியில் உயிருடன் குழந்தையைக் கண்டெடுத்ததாக பாராட் டயா காவல் நிலையத் தலைவர் அனுவால் அப்துல் வஹாப் கூறினார். சிகிச்சைக்காக அக்குழந்தை பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

விசாரணைகள் மற்றும் சிசிடிவி ஆய்வுகளின் அடிப்படையில், விசாரணைக்கு உதவுவதற்காக புக்கிட் ஜம்புல் வளாகத்தில் 23 வயது மலேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் 22 வயது மியான்மர் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று அனுவால் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும், அந்த நபர் செல்லுபடியாகும் பயண ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதாகவும் அவர் கூறினார். குழந்தையைக் கைவிட்டதாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here