ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியால் அடுத்தடுத்து உடல்நிலை பாதிப்பு.

.. இடைக்கால தடை விதித்த ஆஸ்திரியா அரசு

வியன்னா:

ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்கு மேசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த குறிப்பிட்ட பேட்ஜ் தடுப்பூசியைப் பயன்படுத்த ஆஸ்திரியா அரசு தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் குறைந்த வந்த கொரோனா பரவல், பிரிட்டன் உருமாறிய கொரோனாவுக்கு பின் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் வேகமெடுத்துள்ளது.

இதன் காரணமாகப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஐரோப்பிய நாடுகள் வேகப்படுத்தியுள்ளன. இதற்காக பைசர், மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரியாவின் தெற்கு பகுதியில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 49 வயது பெண் திடீரென்று உயிரிழந்தார். அதேபோல தடுப்பூசி எடுத்துக் கொண்ட மற்றொரு பெண்ணுக்கும் மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் இருவர் எடுத்துக்கொண்ட தடுப்பூசியும் ஒரே பேட்ஜை சேர்ந்ததாக இருந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள உடல்நிலை பாதிப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என ஆஸ்திரியா அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த குறிப்பிட்ட பேஜ் தடுப்பூசியைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தற்போது வரை ஆஸ்டரா ஜெனெகா நிறுவனம் எவ்வித விளகத்தையும் தற்போது வரை அளிக்கவில்லை. அதேநேரம் இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த விரைவில் ஆஸ்திரியா சார்பில் உயர்மட்ட கமிட்டி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,557 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு வைரஸ் பாதிப்பு 4.72 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல சிகிச்சை பலனிற்றி ஆஸ்திரியாவில் தற்போதுவரை 8,694 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here