இன்று நண்பகல் நிலவரப்படி 39,255 குடும்பத் தலைவர்கள் வெள்ள நிவாரண நிதியைப் பெற்றுள்ளனர் என்கிறார் பிரதமர்

கோலாலம்பூர், ஜனவரி 6 :

இன்று நண்பகல் நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 49,394 குடும்பத் தலைவர்களில் மொத்தம் 39,255 அல்லது 79.5 விழுக்காட்டினர் அரசாங்கத்தின் வெள்ள நிவாரண நிதி உதவியாக (BWI) தலா RM1,000 பெற்றுள்ளனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனது அதிகாரப்பூர்வ டுவீட்டர் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இன்னும் பதிவு செய்யாதவர்கள் அல்லது உதவி பெறாதவர்கள் பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் (PKOB) மற்றும் அந்தந்த மாவட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்றார்.

மலேசிய குடும்பம் வெள்ள உதவியின் பட்டியலை அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது, இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் BWI நிதியாக RM1,000 வழங்குகிறது.

சிலாங்கூர், பகாங் மற்றும் நெகிரி செம்பிலான் உட்பட தீபகற்பத்தில் உள்ள பல மாநிலங்களைத் தாக்கிய எதிர்பாராத வெள்ளத்தில் சிக்கிய 10 நாட்களுக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று BWI நிதி விநியோகம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here