முறையான ஆவணமின்றி ஆடுகளை ஏற்றிச்சென்ற லோரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது; 50 ஆடுகள் பறிமுதல்

பாசீர் மாஸ், ஜனவரி 8 :

இன்று காலை, முறையான ஆவணமின்றி ஆடுகளை ஏற்றிச் சென்ற லோரி ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளரை போலீசார் கைது செய்ததுடன், சுமார் RM30,000 மதிப்புள்ள 50 ஆடுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக, பாசீர் மாஸ் மாவட்ட காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் முகமட் நசருடின் முஹமட் நசீர் தெரிவித்தார்.

லோரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர், ஜாலான் ரிபெக் – லுபோக் ஜோங் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​அவர்கள் அதிகாலை 2.50 மணியளவில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் தரப்பினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவர்கள் அந்த லோரியைக் கண்டனர்.

அதன்பின்னர் அதன் ஓட்டுநரை சாலையோரத்தில் நிறுத்தச் சொல்லி, வாகனத்தை சோதனை செய்த பின்னர், முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 50 ஆடுகளை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆடுகளை ஏற்றிச் செல்வதற்கான சரியான ஆவணங்களை ஓட்டுநரால் சமர்ப்பிக்க முடியவில்லை.

கம்போங் குபாங் பாக் ஹித்தாமில் உள்ள சட்டவிரோத படகுத்துறை வழியாக ஆடுகள் மாநிலத்திற்கு கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமட் நசருடின் கூறினார்.

லுபோக் ஜோங்கில் வசிக்கும் ‘மை ஜாவி’ எனப்படும் விநியோகிஸ்தர் ஒருவருக்கு விலங்குகள் அனுப்பப்படும்,” என்று அவர் கூறினார்.

சுமார் 15,000 வெள்ளி பெறுமதியான லோரியையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 29 வயதான லோரி ஓட்டுநர் மற்றும் 22 வயதான உதவியாளருக்கும் எதிராக, போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் உட்பட முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளதாக அவர் கூறினார்.

உள்ளூர்வாசிகளான இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here