இந்த ஆண்டு சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பை பினாங்கு முதல்வர் நடத்தவில்லை

ஜார்ஜ் டவுன், ஜனவரி 10 :

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பை பினாங்கு முதல்வர் சவ் கோன் யாவ் நடத்தவில்லை என்று மாநில தகவல் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு ரத்து தொடர்பில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மாநிலத்தில் தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் நிலைமையை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டது.

மேலும் “பினாங்கு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பையும் கருத்தில் எடுத்துக்கொள்கிறது. எனவே, பினாங்கு முதல்வரின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு விழா இந்த ஆண்டு நடத்தப்படாது என முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தகவல் திணைக்களத்தின் படி, ஓமிக்ரான் மாறுபாட்டின் பல கோவிட்-19 தொற்றுக்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, கடுமையான நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) கடைபிடிக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.

பினாங்கில் கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் இரண்டு தொற்றுக்கள் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் பதிவாகியுள்ளன. இந்த இரண்டு வழக்குகளும் சவூதி அரேபியாவிலிருந்து உம்ரா செய்துவிட்டு திரும்பிய நபர்கள் சம்பந்தப்பட்டது.

நாட்டில் உள்ள சீனர்கள் எதிர்வரும் பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here