கைதிகளிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இருவருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

கங்கார், ஜனவரி 11 :

கடந்த ஆண்டு பெர்லிஸில் சிறை அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக, கைதிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரை, விசாரணைக்கு உதவும் வகையில் ஜனவரி 16 வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) பெர்லிஸ் அலுவலக உறுப்பினர்களால், நேற்று 26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கமாலிசா முகமட் ஜெயின் இன்று முதல் ஆறு நாட்களுக்கு அவர்களை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விசாரணை தொடர்பாக சாட்சியமளிப்பதற்காக பெர்லிஸ் எம்ஏசிசி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னரே, சந்தேக நபர் நேற்று மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

“சந்தேக நபர்கள் சிறை அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக, சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து லஞ்சம் கேட்ட அவர்களின் பினாமிகள் அல்லது இடைத்தரகர்கள் என்று நம்பப்படுகிறது.

சந்தேக நபர் கடந்த ஆண்டு சுமார் 80,000 வெள்ளியை 460 லஞ்சப் பரிவர்த்தனைகளை செய்ததாக எம்ஏசிசியின் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 பிரிவு 16 (ஏ) (பி) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதை பெர்லிஸ் எம்ஏசிசி இயக்குநர் சுசெலியானா ஹாஷிம் உறுதிப்படுத்தினார்.

இன்று காலை 10 மணியளவில் கங்கார் நீதிமன்றத்திற்கு சந்தேக நபர்கள் எம்ஏசிசி உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, சுமார் 50 நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here