சமூக ஊடகங்களில் பேசப்பட்ட கம்போங் நெலாயான் தெங்கா தொங்கு பாலம் இன்று சீரமைக்கப்பட்டுள்ளது

கோத்தா கினாபாலு, ஜனவரி 11 :

சண்டகானில் உள்ள கம்போங் நெலாயான் தெங்கா பாழடைந்த தொங்குபாலம் இன்று சீரமைக்கப்பட்டது. இது நேற்று முதல் பாதிக்கப்பட்டிருந்ததுடன் குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக சமூக வலைத்தளங்களில் இரு நாட்களாக பேசு பொருளாக இருந்தது.

அம்னோ லிபரான் (Umno Libaran) பிரிவின் முன்முயற்சியின் அடிப்படையில் கிராம மக்களுடன் இணைந்து சிரமதானப்பணி (கோத்தோங்-ரோயோங்) மூலம் இந்த தொங்கு பாலம் பழுதுபார்க்கப்பட்டது.

அம்னோ லிபரான் தலைவரான மாநில சட்டமன்ற உறுப்பினர் (அடுன்) டத்தோ சுஹைமி நசீர், பாழடைந்த தொங்கு பாலம் உடனடியாக பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று, தனது முகநூலில் ஒரு பதிவின் மூலம் கூறினார்.

“இறைவனின் கிருபையால், லிபரான் அம்னோ பிரிவு மற்றும் கிராம மக்களின் முயற்சியால், நேற்று ‘வைரல்’ ஆன கம்போங் நெலாயான் தெங்கா, பத்து 10 தொங்கு பாலத்தை சீரமைக்கும் கோத்தோங்-ரோயோங் பணி, சிறந்த மற்றும் பாதுகாப்பான நிலையில் நடத்தி முடிக்கப்பட்டது. “என்று அவர் கூறினார்.

பெர்னாமா புகைப்படக்கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்தில், மூன்றாம் தவணை பள்ளி அமர்வு முதல் நாளான நேற்று, பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த பாலத்தினுடாக, கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதைக் காட்டியதை அடுத்து, பாலத்தின் நிலை கவனத்திற்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here