குடிநுழைவுத்துறை அதிகாரிக்கு குற்றத்தை ஒப்பு கொள்ளுமாறு நெருக்குதலா? எம்ஏசிசி துணை இயக்குநர் மறுப்பு

குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர், நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும் பல ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி  வற்புறுத்தியதாக வெளியாகி இருக்கும் செய்தியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) துணை இயக்குநர் ஒருவர் மறுத்துள்ளார்.

புத்ராஜெயா எம்ஏசிசி அலுவலகத்தில் துணை அரசு வழக்கறிஞராக இருக்கும் வான் ஷஹாருடின் வான் லாடின்,  Edisi Khas  என்ற  டுவிட்டர் கணக்கில் கூறப்பட்ட குற்றச்சாட்டைப் பார்த்த பிறகு புகார் அளித்ததாகக் கூறினார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தாம் கடுமையாக மறுப்பதாகக் கூறிய அவர், குடிநுழைவுத்துறை அதிகாரியைச் சந்தித்தபோது மேலும் இரண்டு எம்ஏசிசி அதிகாரிகள் தன்னுடன் இருந்ததாகவும் கூறினார்.

அதிகாரி அளித்த அறிக்கை  Edisi Khas எப்படி கசிந்தது என்பதை காவல்துறை விசாரிப்பதே இந்த அறிக்கையின் நோக்கம்  என்று அவர் அளித்த புகாரில் கூறியுள்ளார். இது தனது நற்பெயரையும், ஊழல் தடுப்பு ஏஜென்சியின் நற்பெயரையும் கெடுக்கும் சதி என்று அவர் கூறினார்.

 Edisi Khas  டுவிட்டரில் வெளிவந்துள்ள  குடிவரவு அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்ப போலீலிஸ் அறிக்கையில், தனக்கு எதிரான தண்டனைச் சட்டத்தின் 165ஆவது பிரிவின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளை அவர் விசாரணைக்கு கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இந்த ஆண்டு ஜூலை 3 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

டிச. 2 அன்று புத்ராஜெயா அலுவலகத்திற்கு வருமாறு எம்ஏசிசி விசாரணை அதிகாரி தன்னைத் தொடர்பு கொண்டதாக அந்த அதிகாரி கூறினார். அங்கு அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கூறப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக தண்டனையாக 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எம்ஏசிசியின் கோரிக்கைக்கு இணங்கவில்லை என்றால் மேலும் பல குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும்  மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here