இந்தியாவிலிருந்து கடத்த முயன்ற 14,150 Kg அரிசி சுங்கத்துறையால் பறிமுதல்.

ஷா அலாம், (ஜூலை 1) :

கடந்த மாத தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து நாட்டுக்குள் கடத்தப்பட இருந்த 14,150 கிலோகிராம் அரிசியை மலேசிய சுங்கத் துறையின் (JKD) மத்தியபகுதித் துறை பிரிவு III (LTA Kuala Lumpur) பறிமுதல் செய்துள்ளது.

மத்தியபகுதி சுங்கத்துறை உதவி இயக்குநர் ஜெனரல் ஸாசுலி ஜோஹான் கூறுகையில், வரித்தொகை 45,280 வெள்ளி உடன் சேர்த்து ஏறத்தாள 113,200 வெள்ளி மதிப்புள்ள அரிசியை, ஜூன் 3 ஆம் தேதி மேற்கு துறைமுகமான கிளாங்கில் ஒரு கொள்கலனில் ஏற்றிக் கடத்த முற்பட்ட வேளை, சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.

“இந்த வழக்கில், பொருளை இறக்குமதி செய்யும் போது இறக்குமதி உரிமத்தை சமர்ப்பிப்பதைத் தவிர்ப்பதற்காக, இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை குறிப்பிடாது  ‘இந்திய மளிகைப்பொருட்கள்” என்று தவறான அறிவிப்பை குறித்த தரப்பினர் வெளியிட்டிருந்தனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்களை ஜே.கே.டி.எம் விசாரணை செய்து வருகின்றது என்றும் மேலும் விசாரணைக்கு உதவும் பொருட்டு உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டதாகவும் ஜாசுலி கூறினார்.

சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 133 (1) (அ) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, இது 500,000 வெள்ளிக்கு மேல் அபராதம் அல்லது அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டும் விதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.

“அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதி உரிமம் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ததும், அதற்கு வரி செலுத்தாமல் இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. பிரிவு 5, இரண்டாம் அட்டவணை, சுங்கத்தின் முதல் பகுதி (இறக்குமதி தடை) ஆணை 2017 இன் கீழ்,அரிசி தடைசெய்யப்பட்ட இறக்குமதி பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ”என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here