கோத்தா பாரு:
நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கிளந்தானின் பச்சோக் மாவட்டம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்காக அங்கு தற்காலிக வெளியேற்ற மையம் (PPS) ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 12.52 மணி நிலவரப்படி, 11 குடும்பங்களைச் சேர்ந்த 38 குடியிருப்பாளர்கள் செக்கோலா கெபாங்சான் (SK) பாவ் செம்பிலான் PPS இல் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, சமூக நலத்துறையின் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் ஒரு பெண் குழந்தை, 12 வயது வந்த ஆண்கள், 12 வயது வந்த பெண்கள், ஆறு சிறுவர்கள் மற்றும் ஏழு சிறுமிகள் அடங்குவர்.





















