வெள்ள நிவாரணத் தகவல்களை பொதுமக்கள் பெறுவதற்கான புதிய அகப்பக்கம் அறிமுகம்

கோலாலம்பூர், ஜனவரி 17 :

வெள்ள நிவாரணம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எளிதாகப் பெறுவதற்காக, நிதி அமைச்சகம் bantuanbanjir.com ன்ற போர்ட்டலை உருவாக்கி, அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு அகப்பக்கத்தின் கீழ் பல்வேறு முகவர்களின் இணைப்புகளையும் ஒன்றிணைக்கிறது என்று நிதி அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

வெள்ள நிவாரண உதவித்தொகை (BWI) போன்ற அரசாங்க உதவிகளின் முழுப் பட்டியல் மற்றும் வீடு பழுதுபார்ப்பதற்கான பிற உதவிகள் மற்றும் வாகன பழுதுபார்க்கும் வவுச்சர்கள் இந்த போர்ட்டலின் கீழ் கிடைக்கும்.

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் RM1.4 பில்லியன் நிதி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது, இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி RM61,000 ஐ எட்டுகிறது என்றார்.

“நான் பல்வேறு வெள்ள நிவாரணத் திட்டங்களில் பங்கேற்றபோது, ​​பல வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தனர், ஆனால் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று, உதவிக்கு விண்ணப்பிப்பதற்கான தகவல்களை எவ்வாறு பெறுவது என்பதுதான்.

“நிவாரண உதவி விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஏஜென்சிகளிடம், உதவி பெறுவது எப்படி என்பதை மக்கள் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம்தான் ” என்று Bantuanbanjir.com இல் 1.52-வினாடி காணொளியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here