குப்பை அகற்றும் தளத்திற்கு அருகிலுள்ள 10 பள்ளிகள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது

நிபோங் தெபால், ஜனவரி 18 :

பூலாவ் புருங் குப்பை அகற்றும் தளத்திற்கு அருகில் அமைந்துள்ள மொத்தம் 10 பள்ளிகள் நாளை முதல் இந்த வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு மூடப்படும்.

SJKT லாடாங் பைராம் ; SJKC பை டீக்; SMK ஸ்ரீ நிபோங், SJKT நிபோங் தெபால்; SK ஸ்ரீ செந்தோசா ; SK கிளேடாங் ஜெயா; SJKT லாடாங் சங்காட் ; SMK மெதடிஸ்ட், SK மெதடிஸ்ட் மற்றும் SK நிபோங் தெபால் ஆகியவை அடங்கும்.

செபெராங் பிராய் செலாத்தான் மாவட்ட கல்வி அலுவலகம் (PPD) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பை கிடங்கில் இருந்து 10 கிலோமீட்டர் (கிமீ) சுற்றளவில் அமைந்துள்ள பள்ளிப் பகுதியில் காற்று குறியீட்டு வாசிப்பு, குடியிருப்புவாசிகளின் உடல்நலம் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நேற்று மாவட்ட பேரிடர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இன்று வெளியிட்ட அறிவித்தலில் படி, சம்பந்தப்பட்ட பள்ளி, பள்ளி செயல்பாடுகளை மூடுவது குறித்து, பள்ளியில் சிற்றுண்டிச்சாலை நடத்துவோர், பேருந்துகள் ஓட்டுநர்கள் , துப்புரவுப்பணியாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருக்கு, ஆரம்ப ஆயத்த நடவடிக்கைக்காக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், மாவட்ட பேரிடர் குழுவின் முடிவு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளியின் மறு செயல்பாட்டு நிலை குறித்து PPD இந்த சனிக்கிழமைக்கு பின்னர் தெரிவிக்கும்.

பள்ளி மூடும் காலத்தில், மாணவர்கள் வீட்டிலேயே கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளை தொடருவார்கள் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த புதன்கிழமை மாலை 4.43 மணியளவில் இடம்பெற்ற தீவிபத்துச் சம்பவத்தில் 16.19 ஹெக்டேர் நிலப்பரப்பில் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது, இன்றுவரை முழுமையாக அது அணைக்கப்படவில்லை.

தீ விபத்துக்குள்ளான மதிப்பிடப்பட்ட பரப்பளவு 6.5 ஹெக்டேர் ஆகும், மேலும் தீ பரவாமல் தடுக்கபினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM மூலம் ஆரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பினாங்கு சுற்றுச்சூழல் துறை காற்றின் தரக் கண்காணிப்பை மேற்கொண்டு , அதன் மூலம் சுகாதார அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வாயுக்களது உள்ளடக்கத்தைக் கண்டறிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here