மத்தியபிரதேசத்தில் பழங்குடியின பெண் கண்டெடுத்த உயர்தர வைரம்

போபால்,மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் வைரச் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தின் குறிப்பிட்ட பகுதியை ராஜ்பூரில் வசிக்கும் வினிதா கோண்ட் என்ற பழங்குடியின பெண் மற்றும் சிலர் குத்தகைக்கு எடுத்து வைரம் தேடி வந்தனர். அப்போது வினிதா 3 வைரங்களை கண்டெடுத்தார். அவை 1.48 காரட் மற்றும் 20 சென்ட் மற்றும் 7 சென்ட் எடை கொண்டது. அந்த வைரங்கள் ஏலம் விடப்படும். அவை பல லட்சத்துக்கு ஏலம் போகும் என தெரிகிறது. வைர வியாபாரி அனுபம்சிங் இதுகுறித்து கூறும்போது, ‘இந்த வைரங்களில் ஒன்று உயர்தரம் மிக்கது. மற்ற இரண்டும் குறைந்த தரம் கொண்டவை’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here