ஜோகூர் சட்டமன்றம் கலைப்பா? உண்மையில்லை என்கிறார் மாநில சட்டமன்ற தலைவர்

ஜோகூர் மாநில சட்டசபையை கலைப்பதற்கான விண்ணப்பக் கடிதம் எதுவும் வரவில்லை  என்று  மாநில சட்டமன்றத் தலைவர் சுஹைசன் கையாத்  உறுதிப்படுத்தினார். சமூக ஊடகங்களில் உலாவரும்  தகவல் உண்மையல்ல என்று அவர் கூறினார். முன்னதாக, ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமது மாநில சட்டசபையை கலைக்க கோரி மாநில சட்டசபை சபாநாயகர் அலுவலகத்திற்கு நேற்று கடிதம் அனுப்பியதாக ஒரு செய்தி கூறியது.

கடந்த மாதம் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஒஸ்மான் சபியான் இயற்கை எய்தியதை தொடர்ந்து மாநிலத் தேர்தல் பற்றிய வதந்திகள் பரவி வருகின்றன. ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் UMNO தலைமையிலான மாநில அரசாங்கம் ஒரு இருக்கை (seat)  பெரும்பான்மையை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here