பிரதமரை சந்தித்த பிறகு பூப்பந்து விளையாட்டாளரான லீ ஜி ஜியாவின் பிரச்சினை முடிவுக்கு வந்தது

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று மலேசிய பூப்பந்து சங்கத்தின் (BAM) தலைவர் நோர்சா ஜகாரியா, தேசிய ஆடவர் ஒற்றையர் வீரர் லீ ஜி ஜியா மற்றும் பெண்கள் ஒற்றையர் வீராங்கனை கோ ஜின் வெய் ஆகியோரை சந்தித்து பேசினார். பெர்டானா புத்ராவில் நடைபெற்ற கூட்டத்தில், BAM இன் இரண்டு துணைத் தலைவர்களான V சுப்ரமணியம் மற்றும் ஜஹபர்தீன் முகமது யூனூஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஒரு பயனுள்ள விவாதம். இப்போது எல்லாம் சரியாகி விட்டது. நமது தேசிய வீரர்கள் உலக அரங்கில் தொடர்ந்து சிறந்து விளங்கட்டும்.  மேலும் நமது தேசியக் கொடி (Jalur Gemilang) அனைத்துலக அரங்கில் மீண்டும் உயரட்டும் என்று இஸ்மாயில் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று,  உலக விளையாட்டாளர்களில்  7ஆவது இடத்தில் இருக்கும் ஜியா  ஜனவரி 11 ஆம் தேதி BAMவில் ராஜினாமா செய்த பிறகு, ஜனவரி 18 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஜியாவை போட்டிகளுக்கு பதிவு செய்ய மாட்டோம் என்று மலேசிய பூப்பந்து சங்கம் அறிவித்தது. இருப்பினும் செவ்வாயன்று, நோர்சா விளயாட்டாளருடன் கலந்துரையாடிய பிறகு தனது முறையீட்டை ஏற்று  ஜியா மீண்டும் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்ட மற்றொரு விளையாட்டாளரான ஜின் வெய்யின் மேல்முறையீட்டின் நிலை இன்னும் தெரியவில்லை. BAM-ஐ விட்டு வெளியேறியதற்காக அவருக்கும் அக்டோபர் 31, 2021 முதல் இரண்டு ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here