இ-ஹெய்லிங் ஓட்டுநரை காயப்படுத்தி, கொள்ளையடித்ததில் குற்றம் புரியவில்லை என்கிறார் வயர்மேன்

இ-ஹெய்லிங் டிரைவரை கொள்ளையடித்து, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வயர்மேன் ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று மறுத்தார். 24 வயதான ஃபட்லான் அஹ்மத் ஃபாஹிமி, நீதிபதி மஹ்யோன் தாலிப் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் மனு செய்தார்.

ஜனவரி 24 அன்று மதியம் 1.30 மணியளவில் இங்குள்ள ஜாலான் செந்தூல் பசாரில் பி.கேசவன் 45, என்பவரிடம்  கொள்ளையடித்தோடு, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக  அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 394ஆவது பிரிவின் கீழ்,  குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஃபட்லான் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் அல்லது பிரம்படி வழங்கப்படலாம். அவரது வழக்கறிஞர் முகமட் இர்வான் சுமதி, தனது வாடிக்கையாளரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்புமாறு கோரினார்.

எங்கள் சொந்த அவதானிப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனநல பிரச்சினைகள் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்  என்று அவர் மேலும் கூறினார்.

பின்னர் நீதிமன்றம் ஃபட்லானை பேராக், பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு அனுப்பி கண்காணிப்பதற்காக உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த தேதி மார்ச் 4 ஆம் தேதி குறிப்பிடப்பட்டது.  அரசு சார்பாக துணை வழக்கறிஞர் நஜிஹா பர்ஹானா சே அவாங் வழக்கு தொடர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here