சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 5,566 கோவிட்-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று கண்டறியப்பட்ட 4,774 தொற்றுகளில் இருந்து அதிகரித்துள்ளது. ஒரு அறிக்கையில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,876,324 ஆக உள்ளது என்றார்.
3,187 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,787,190 ஆக உள்ளது. இதற்கிடையில், 113 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 90 பேருக்கு கோவிட்-19 தொற்றும் மற்றும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். 59 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. அதில் 40 நோயாளிகளுக்கு கோவிட்-19 தொற்று மற்றும் மீதமுள்ள 19 பேர் நேர்மறையாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இன்று 5,339 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளனஇதில் 5,194 மலேசி. யர்கள் மற்றும் 145 வெளிநாட்டவர்கள் உள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட 227 வழக்குகளும் இருந்தன. புதிய நோய்த்தொற்றுகளில், 0.9% மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 வழக்குகள் என்று நூர் ஹிஷாம் கூறினார். இன்று ஏழு புதிய கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.




















