வெள்ள உதவி தாமதத்திற்கு சிலாங்கூர் மந்திரி பெசார் மன்னிப்பு கோரினார்

ஷா ஆலமில் குறிப்பாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி மன்னிப்புக் கோரினார்.

“Program Bantuan Selangor Bangkit” என்றழைக்கப்படும் உதவியை விநியோகிப்பதில் தாமதமானது மிக அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் காரணமாக இருப்பதாக அவர் கூறினார். கிள்ளானில் மட்டும் 77,000 விண்ணப்பங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் மறுபரிசீலனை செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்று அமிருதீன் விளக்கினார். அதே குடும்பங்களில் இருந்து நகல் விண்ணப்பங்கள் இருப்பதாகவும் கூறினார்.

இந்த நகலைத் தவிர்க்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமான மற்றும் நியாயமான உதவியை உறுதி செய்யவும் மாவட்ட அலுவலகங்கள் தரவுகளை வரிசைப்படுத்தும் இறுதி கட்டத்தில் உள்ளன என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இன்னும் 30,000 விண்ணப்பங்கள் கிள்ளான் மற்றும் 12,000 பெட்டாலிங்கில் பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்படாமல் உள்ளன என்று அமிருதீன் கூறினார்.இப்பணியை விரைவுபடுத்த மற்ற மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு நாளும் 3,000 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவியை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார். இன்றுவரை ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் 55,425 குடும்பங்கள் RM1,000 உதவியைப் பெற்றுள்ளனர். வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்கள் RM10,000 உதவியைப் பெற்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மொத்தம் RM55.555 மில்லியன் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. மீதமுள்ள பெறுநர்களுக்கு மாத இறுதிக்குள் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அமிருதீன் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here