ஜாலான் இஸ்தானா அருங்காட்சியகத்தின் பக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம் : நீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது

கோலாலம்பூர், பிப்ரவரி 5 :

கடந்த புதன்கிழமை, இங்குள்ள ஜாலான் இஸ்தானாவில் உள்ள ரோயல் அருங்காட்சியகத்தின் நுழைவாயிலுக்குப் பக்கத்தில் உள்ள, நீர்த்தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி, அவர் நீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது.

பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் கூறுகையில், காலை 9.46 மணிக்கு மிதக்கும் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தமது துறைக்கு ஒரு அறிக்கை கிடைத்தது.

அவர் அளித்த தகவலின்படி, பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் நிலையத்தின் போலீஸ் குழு மற்றும் கோலாலம்பூர் கான்டிஜென்ட் போலீஸ் தலைமையகம் (IPK) தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, பலியானவர் 60 வயதுடைய பெண் என்பதைக் கண்டறிந்தனர்.

“பாதிக்கப்பட்டவர் சிவப்பு வட்ட காலர் டி-சர்ட் மற்றும் நீல நிற கால்சட்டை அணிந்திருந்தார். சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில் பாதிக்கப்பட்டவரின் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் அவரிடம் சிவப்பு சட்டையும் ஒரு ஜோடி கண்ணாடியும் அடங்கிய மஞ்சள் துணி பை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக அமிஹிசாம் கூறினார்.

“பின்னர் உடல் கொண்டுவரப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் (PPUM) தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

“பிரேத பரிசோதனை முடிவுகளின் படி, பாதிக்கப்பட்டவரின் உடலில் குற்றவியல் கூறுகளால் ஏற்படக்கூடிய காயங்களின் தடயங்கள் எதுவும் இல்லை” என்று அவர் கூறினார்.

பிரேத பரிசோதனை முடிவுகள் கடந்த வியாழன் அன்று கிடைத்ததாகவும், நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் இன்று காவல்துறையைத் தொடர்பு கொண்டதாகவும், அவரது உடல் UMMC தடயவியல் பிரிவில் அடையாளம் காணப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here