சாலை விபத்தில் டிரெய்லர் ஓட்டுநர் பலி- மேலும் 7 பேர் காயம்

ஈப்போவில் நேற்று மதியம் ஜெரிக், தாசேக் பெண்டிங், ஜாலான் ராயா திமூர் பாராட் KM34 இல் டிரெய்லர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 37 வயதான டிரெய்லர் ஓட்டுநர் கொல்லப்பட்டார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் சம்பவம் குறித்து திணைக்களத்திற்கு மாலை 4.42 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

நாங்கள் உடனடியாக கெரிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினோம். மேலும் மூன்று வாகனங்கள் மோதியது டிரெய்லர் ஓட்டுநரின் மரணத்திற்கு வழிவகுத்தது.

டிரெய்லர் நடத்துனர் காயங்களுடன் தப்பினார். புரோட்டான் சாகா காரில் இருந்த ஐந்து பேர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தனர் என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ட்ரெய்லர் ஓட்டுநரின் சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கெரிக் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், சிக்கிய பாதிக்கப்பட்டவர்களை அகற்றுவதற்கு தீயணைப்புப் பிரிவினர் விசேஷ உபகரணங்களைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here